News August 20, 2024
செரிமானக் கோளாறுகளை தீர்க்கும் திருநீற்றுப்பச்சிலை

மழைக்காலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறு உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் திருநீற்றுப்பச்சிலைக்கு இருப்பதாக குணவாகடப் பாடல் கூறுகிறது. யுஜெனால், லினாலூல், ஜெரானியால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் இலைகளிலிருந்து சாறு எடுத்துத் தேனுடன் கலந்து செய்யப்படும் மருந்தை உரிய வகையில் உண்டால், அலர்ஜியால் ஏற்படும் சுரம், வாந்தி, தேமல், படை போன்ற நோய்களும் நீங்குமாம்.
Similar News
News January 14, 2026
திராவிட பொங்கல் Vs இந்துக்களின் விழா!

பொங்கல் பண்டிகையை ‘திராவிட பொங்கலாக’ கொண்டாட ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, பொங்கல் ‘இந்துக்களின் விழா’ என்றும், பொங்கலில் உள்ள இந்து அடையாளங்களை நீக்க திமுக சதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியது. அதிமுகவும், ‘அரசியல் நாடகம்’ என விமர்சித்த நிலையில், ஸ்டாலினின் அழைப்பு கட்சி தொண்டர்களுக்கானது; பொதுமக்களுக்கானது அல்ல என்று திமுக விளக்கமளித்துள்ளது.
News January 14, 2026
உயிருடன் இருப்பவர்கள் ‘கொலை’: மம்தா

மேற்கு வங்கத்தில் SIR நடவடிக்கை மூலம் 54 லட்சம் உண்மையான வாக்காளர்களை ECI தன்னிச்சையாக நீக்கியுள்ளதாக மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவால் உருவாக்கப்பட்ட AI டெக்னாலஜியை பயன்படுத்தி, உயிருடன் இருக்கும் பல வாக்காளர்களை ECI ‘கொலை’ செய்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை பயன்படுத்திய பெண்களின் பெயரையும் நீக்கி அதிகாரதுஸ்பிரயோகம் செய்துள்ளதாக சாடியுள்ளார்.
News January 14, 2026
மன அழுத்தத்தால் நெஞ்செரிச்சல் ஏற்படுமா?

உணவுகள் மட்டுமே நெஞ்செரிச்சலுக்கு காரணம் என நினைத்திருப்போம். ஆனால், மன அழுத்தத்தாலும் நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தில் இருக்கும் போது நம்முடைய வயிற்றில் உள்ள அமில உற்பத்தியை, உடல் அதிகரிக்க செய்கிறது. இதனால் ஜீரண செயல்பாடு சரியாக நடக்காமல், நெஞ்செரிச்சல் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.


