News October 12, 2025
சென்னை: 3வயது சிறுவனை கடித்த தெரு நாய்

சென்னை, நெற்குன்றத்தில் 3வயது ஆண் குழந்தையை தெரு நாய் ஒன்று நேற்று கடித்துள்ளது. உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் பிறப்புறுப்பை நாய் கடித்துள்ளதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். “தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 8, 2025
S.A.சந்திரசேகரை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள்

சென்னை எம்.ஆர்.சி நகரில் காங்கிரஸ் குழுவினர் இன்று த.வெ.க தலைவர் விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகரை நேரில் சந்தித்தனர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். கடந்த சில மாதங்களாக த.வெ.க., காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
News December 8, 2025
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ.. தள்ளிப்போகும் திறப்பு விழா?

சென்னை, பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், சில ரயில் நிலையங்களில் கிளியரன்ஸ் கிடைப்பதற்கு தாமதமாவதால், ஜனவரியில் மெட்ரோ திறக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 8, 2025
வெளிநாட்டு பறவைகள் சென்னை வருகை!

சென்னை அடையாறு நோக்கி வெளிநாட்டுப் பறவைகள் இன்று வந்துள்ளது. அழகாக காட்சியளிக்கும் கூவம் நதிக்கரையில் பறவைகள் பறந்து வருகிறது. சென்னையில் உள்ள நீர் நிலைகளை சென்னை மாநகராட்சி சரியான நேரத்தில் தூர்வாரி சுத்தம் செய்துள்ளதே வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த பறவைகளை அந்த பகுதியில் செல்பவர்கள் பார்த்து செல்கின்றனர்.


