News August 23, 2025
சென்னை: 10ஆம் வகுப்பு போதும்! அட்டகாசமான அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை கீழ் இயங்கும் அச்சு மையங்களில் காலியாக உள்ள Junior Electrician, Assistant Offset Machine Technician, Junior Mechanic உள்ளிட்ட 56 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு ஏற்ப ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் உள்ள <
Similar News
News January 18, 2026
சென்னை: வேலைக்குச் சென்றவர் சாலை விபத்தில் பலி!

சென்னை, புழல் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக ராஜேஷ் (40) காந்தி தெருவில் இருந்து PRH ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரெட்டேரியில் இருந்து வந்து கொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ராஜேஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 18, 2026
சென்னை: துப்பாக்கி முனையில் ரவுடி கைது!

சென்னை சூளையை சோ்ந்தவா் ரெளடி கனகு. இவா் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை நீண்ட காலமாக போலீஸ் தேடி வந்த நிலையில், இவர் தனது நண்பா்களுடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றிருப்பதாக, தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றாலம் சென்ற தனிப்படை போலீஸாா், கனகராஜ், காா்த்திக், சாபின், பிரகாஷ் ஆகிய 4 பேரையும் துப்பாக்கி முனையில் நேற்று கைது செய்தனா். இவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனா்.
News January 18, 2026
சென்னை: வாலிபர் தலை நசுங்கி பலி!

சென்னை பிராட்வே – தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நேற்று மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து மேட்லி சாலை வழியாக பேருந்து நிலையத்துக்குள் சென்றது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வட மாநில இளைஞர் மீது மோதியதில், அவர் சாலையில் விழுந்தார். இதில் பின்பக்க டயர் அவர் மீது ஏறியதில், தலைநசுங்கி பலியானார். இதுகுறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


