News August 19, 2024
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆக. 19) சந்தேகத்தை ஏற்படுத்தும் படியாக 3 நபர்கள் அட்டைப் பெட்டிகளுடன் வந்தனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது அரிசி, மளிகை பொருட்களை மலேசியா கொண்டு செல்வதாக தெரிவித்தனர். பின்னர், பெட்டி சோதனை செய்ததில், ரூ.15 லட்சம் மதிப்பிலான 780 நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News January 20, 2026
டெலிவரி நபர் மீது தாக்குதல் – EPS கண்டனம்

சென்னை வேளச்சேரியில் ZEPTO மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் பார்த்திபன் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி நெஞ்சை பதைக்க வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி பதிவு செய்துள்ளார். “இன்னும் எத்தனை முறை தமிழக மக்கள் இப்படிப்பட்ட கொடூர காட்சிகளை காண வேண்டும் முதல்வர் அவர்களே” என கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 20, 2026
மெரினாவில் பரபரப்பு!

திருச்சியை சேர்ந்த சண்முகவேல் (38) மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து சண்முகவேலிடம் தகராறு செய்துள்ளனர். அவரை அடித்து உதைத்து அவர் வைத்திருந்த ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். படுகாயம் அடைந்த சண்முகவேல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த முருகா (31) என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
News January 20, 2026
மாமூல் தராத ஆத்திரத்தில் பொய் வழக்கு!

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவரை கடந்த டிசம்பர் மாதம் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், சென்னையில் எப்படி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது என துணை ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வனிதா மாமூல் கொடுக்காத காரணத்தால் போலீசார் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்த வனிதாவை பொய் வழக்கில் கைது செய்தது தெரியவந்தது.


