News March 26, 2024

சென்னை: ரூ.5.26 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

image

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் கடந்த மார்ச் 16 முதல் இதுவரை நடைபெற்ற அதிரடி சோதனையில் மொத்தமாக ரூ.59.13 லட்சம் ரொக்கமும், ரூ.5.26 கோடி மதிப்பிலான 7,999 கிராம் தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

சென்னை மெரினாவில் இன்று கலைத்திருவிழா

image

சென்னை மெரினாவில் இன்று கலைவிழா நடைபெற உள்ளது. இதில் ஆதிமேளம், வில்லுப்பாட்டு, மல்லர் கம்பம், தென்னிந்திய நாட்டுப்புறக் கலைகள் என மெரினாவில், ஒரே மேடையில் நடைபெற உள்ளது. நாள்: 09.11.2025 (ஞாயிறு) நேரம்: மாலை 5:30 மணி
இடம்: நீலக் கொடி பகுதி, மெரினா கடற்கரை. பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து கலைத்திருவிழாவை ரசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்ஜோய் பண்ணுங்க.

News November 8, 2025

சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

சென்னை மக்களே! உங்களின் 10th, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், இனி கவலையில்லை. ஈஸியாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் <>epettagam <<>>என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பதிவு செய்தால், உங்களின் சான்றிதழ்கள் அனைத்தையும் டவுன்லோடு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

6.42 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

image

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவம் வழங்கி வருகின்றனர். நேற்று வரை 6.42 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி முடிவடையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!