News October 19, 2025
சென்னை மெட்ரோ சேவையில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் 20.10.25 முதல் 24.10.25 வரை காலை 5:00–6:30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. இதனால், அந்த நேரத்தில் ரயில்கள் வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 6:30 மணிக்குப் பிறகு சேவை வழக்கம்போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் திட்டமிட்டு பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News December 12, 2025
சென்னை கர்ப்பரேஷனில் வேலை; ரூ.60,000 சம்பளம்!

சென்னை கர்ப்பரேஷனில் கால் நடை மருத்துவம் படித்தவருக்கு 15 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாத சம்பளம் ரூ.60,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 12, 2025
சென்னையில் சுகாதார மீறலுக்கு அபராதம் அதிகரிப்பு!

சென்னையில் GCC கடந்த ஒராண்டில் 79,875 டிஜிட்டல் அபராதங்கள் 40,227 பொது சுகாதார மீறல்களுக்காக விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் எரிப்பு, குப்பை கொட்டல், கழிவு பிரிப்பு தவறுதல் உள்ளிட்டவை அதிகம். கடைகள், கட்டுமானக் கழிவு கொட்டல், கொசு ஆதாரம், சட்டவிரோத வடிகால் இணைப்புகள் ஆகியவற்றிற்கு அபராதமாக மொத்தம் ரூ.9.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
சென்னையில் 12 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

சென்னை மாவட்டத்தில் உள்ள 40.04 லட்சம் வாக்காளர்களில், 70% பேர் மட்டுமே வாக்காளர் திருத்தப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 12 லட்சம் வாக்காளர்களிடமிருந்து விவரங்கள் பெறப்படாததால், அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். படிவம் சமர்ப்பிக்க டிசம்பர் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


