News October 10, 2024
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ராயபுரம், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, அடையாறு, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், பெரம்பூர், சைதப்பேட்டை, அண்ணா சாலை, கோயம்பேடு, வடபழனி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
Similar News
News November 17, 2025
சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்! பள்ளிக்கு விடுமுறையா?

சென்னையில் இன்று (நவ.17) மிககனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் சென்னையில் மழையின் தாண்டவத்தை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 16, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி; ஆட்சியர் அழைப்பு

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22 ஆம் தேதி சனிக்கிழமை சி. எஸ்.ஐ.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி சாந்தோமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நவ.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றார்


