News August 21, 2024
சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவு

சென்னை நகர் முழுவதும் வீட்டு வாசல்களில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தியிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டின் முன் பகுதியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் விபத்துகளும் ஏற்படுவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
சென்னை: கூவம் ஆற்றில் குதித்த இளம்பெண் சடலமாக மீட்பு!

சென்னை அண்ணா சதுக்கம், நேப்பியர் பாலத்தில் இருந்து நேற்று இளம்பெண் ஒருவர் திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் யுவஶ்ரீ (25) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் பெண்ணின் உடல் இன்று கரையொதுங்கியது. மேலும், உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 14, 2026
சென்னை: UPI error-ஆ? பேங்கிடம் இருந்து ரூ.100 பெறலாம்!

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News January 14, 2026
சென்னையில் சம்பளப் பிரச்னையா?

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <


