News August 22, 2024

சென்னை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

image

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 50% பேருந்துகளுக்கு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இதன் மூலம், பராமரிப்பு, எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் ஈடுசெய்யப்படும். மேலும், மாநகர போக்குவரத்து கழகத்தின் உட்கட்டமைப்புகளுக்கு ரூ.111.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

சென்னை: டாஸ்மாக் அருகே தலை நசுங்கி கிடந்த ஆண் சடலம்

image

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் முரளி, (28). இவர் திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் சந்திப்பு டாஸ்மாக் கடை அருகே நேற்று தலை நசுங்கிய நிலையில், இறந்து கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 8, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் நேற்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News November 7, 2025

வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்

image

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மதியம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!