News November 26, 2025
சென்னை: பொதுவெளியில் பெண்களிடம் ஆபாச சைகை

சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம், பாலியல் ரீதியாக ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, உ.பியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் சென்னை நகரில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.
Similar News
News January 24, 2026
சென்னை: கோயிலில் ரூ.41,800 சம்பளத்தில் வேலை!

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சரக்கறை காப்பாளர், அலுவலகம் உதவியாளர், இரவு காவலர், தோட்ட பராமரிப்பாளர், கால்நடை பராமரிப்பாளர், ஓதுவார், சுயம்பாகி, ஸ்ரீபாதம் தாங்கி ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 8ம் வகுப்பு முதல் பணிக்கு ஏற்றாற்போல படித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.41,800 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.27-க்குள் <
News January 24, 2026
சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News January 24, 2026
சென்னையில் தொடர்ந்து மழை வெளுக்கும்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஷேர் பண்ணுங்க.


