News March 29, 2024
சென்னை: தீவிர வாக்கு சேகரிப்பில் தமிழிசை

தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று(மார்ச் 28) அவர் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை மற்றும் நியூ காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
Similar News
News January 14, 2026
சென்னையில் சம்பளப் பிரச்னையா?

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <
News January 14, 2026
சென்னை: ரயில்வேயில் வேலை – APPLY NOW

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளமாக Rs.44,900 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <
News January 14, 2026
சென்னை: விரக்தியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை, கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மகள் பிரியங்கா (16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். இந்நிலையில், அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், பெற்றோர் பிரியங்காவை கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


