News September 29, 2025
சென்னை சென்ட்ரல் – மங்களூர் இடையே சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல் மங்களூர் இடையே சிறப்பு ரயில் செவ்வாய்கிழமை (செப்.30) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் மங்களூர் சிறப்பு ரயில் செவ்வாய்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு மங்களூர் சென்றடையும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழிதடங்களில் நின்று செல்லும்.
Similar News
News November 7, 2025
’எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்கக் கூட முடியாது’

சென்னையில் திமுக நிர்வாகி இரா.ஏ.பாபு இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ‘நெருக்கடி நிலை காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகளை அனுபவித்தனர். இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட முடியாது’ என்றார்.
News November 7, 2025
சென்னை வாசிகளே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

சென்னை வாசிகளே, தற்போது தமிழக முழுவதும் வாக்காளர் சீர்த்திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் சரி பார்க்கும் blo அலுவலர்கள் விபரம் வெளியாகி உள்ளது. <
News November 7, 2025
மெட்ராஸ் IIT புதிய சாதனை!

நீரிழிவு நோயாளிகள் சுய பரிசோதனைக்காக குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை (சி.ஜி.எம்) பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில், குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை IIT கண்டுபிடித்து இருக்கிறது. சாதனத்தின் அடிப்படை வடிவமைப்பை மறுவரையறை செய்து, நீண்டகாலத்திற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, துல்லியத்தையும், நம்பகத்தன்மையின் தரங்களையும் உறுதி செய்துள்ளனர்.


