News October 11, 2025
சென்னை: குடிநீர், கழிவுநீர் குறித்து புகார் அளியுங்கள்

சென்னையில், தற்போது மழை பெய்து வருவதால், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் 044 – 4567 4567, 044 – 14420, 1916 மற்றும் 044 – 2845 4040 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். கட்டணமில்லா எண் 1916, தேசிய உதவி எண் 14420 போன்ற எண்களிலும் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது CMWSSB என்ற App-இல் புகார் அளிக்கலாம். புகார் அளிக்க இத்தனை வழிகள் உல்ளன. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 8, 2025
சென்னை: டாஸ்மாக் அருகே தலை நசுங்கி கிடந்த ஆண் சடலம்

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் முரளி, (28). இவர் திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் சந்திப்பு டாஸ்மாக் கடை அருகே நேற்று தலை நசுங்கிய நிலையில், இறந்து கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் நேற்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
News November 7, 2025
வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மதியம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


