News August 24, 2025
சென்னை கலெக்டர் அறிவிப்பு

பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் ஒரு பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்பு கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 25, 2026
சென்னை: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
சென்னை: திருடிய வண்டியிலேயே தொழில் செய்த நபர்!

சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் மகேஸ்வரன் ஆட்டோவை திருடிய பிரேம்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். தி.நகர் பகுதியில் வாகன சோதனையின்போது பிடிபட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வாரமாக திருட்டு ஆட்டோவில் சவாரி ஓட்டி, அதில் கிடைத்த வருமானத்தில் மது குடித்துவிட்டு ஆட்டோவிலேயே தூங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.
News January 25, 2026
சென்னை: வீட்டில் பாலியல் தொழில்!

சென்னை வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் சோதனை செய்த போது, வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கு சென்று பாலியல் தொழில் நடத்திய காயத்ரி (31) என்பவரை கைது செய்த போலீசார், 4 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


