News November 26, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
சென்னை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

சென்னைமக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
டெலிவரி நபர் மீது தாக்குதல் – EPS கண்டனம்

சென்னை வேளச்சேரியில் ZEPTO மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் பார்த்திபன் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி நெஞ்சை பதைக்க வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி பதிவு செய்துள்ளார். “இன்னும் எத்தனை முறை தமிழக மக்கள் இப்படிப்பட்ட கொடூர காட்சிகளை காண வேண்டும் முதல்வர் அவர்களே” என கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 20, 2026
மெரினாவில் பரபரப்பு!

திருச்சியை சேர்ந்த சண்முகவேல் (38) மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து சண்முகவேலிடம் தகராறு செய்துள்ளனர். அவரை அடித்து உதைத்து அவர் வைத்திருந்த ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். படுகாயம் அடைந்த சண்முகவேல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த முருகா (31) என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


