News September 29, 2025

சென்னை: இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

Similar News

News November 8, 2025

சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

சென்னை மக்களே! உங்களின் 10th, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், இனி கவலையில்லை. ஈஸியாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் <>epettagam <<>>என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பதிவு செய்தால், உங்களின் சான்றிதழ்கள் அனைத்தையும் டவுன்லோடு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

6.42 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

image

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவம் வழங்கி வருகின்றனர். நேற்று வரை 6.42 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி முடிவடையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News November 8, 2025

சென்னை: விஜய்க்கு முதல்வர் மறைமுக பதிலடி!

image

திமுக – தவெக இடையே தான் வரும் தேர்தலில் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75வது ஆண்டு விழாவில், ‘திமுகவின் வரலாறு தெரியாத சிலர் மிரட்டிப் பார்க்கின்றனர். அதிலும், சில அறிவிலிகள் திமுக போல் வெற்றி பெற்றுவிடுவோம் என பகல் கனவு காண்கின்றனர். திமுக போல் வெற்றி பெற அறிவும், உழைப்பும் தேவை’ என பேசினார்.

error: Content is protected !!