News August 8, 2025
சென்னையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 12, 2025
சென்னை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News November 12, 2025
சென்னையில் அதிரடி மாற்றம்!

தமிழகம் முழுவதும் காவல்துறையில் 12 டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை காவல் ஆயுதப்படை உதவி ஆணையராக பணியாற்றிய வந்த சுப்பிரமணியம், கோயம்பேடு போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளனர். சென்னை ஆயுதப்படை உதவி ஆணையர் முருகராஜ், கொளத்தூர் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
News November 12, 2025
சென்னையில் 184 படுகொலைகள்..!

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், கடந்த 22 மாதங்களில் சென்னையில் மட்டும் 184 படுகொலைகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு 102 கொலைகளும், இவ்வாண்டு 10 மாதங்களில் 82 படுகொலைகளும் நடந்துள்ளன. இதே காலகட்டத்தில் 419 செயின் பறிப்பு சம்பவங்கள், 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பல குற்றங்களை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.


