News August 22, 2024
சென்னையில் 24 இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள்

சென்னை மாநகராட்சியில் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அடைப்புள்ள 24 இடங்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி நேற்று அறிவித்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள மில்லர்ஸ் சாலை, பர்னபி சாலை, திருமங்கலம் 100அடி சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை உள்ளிட்ட 24 இடங்களில் மெட்ரோ பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன. எனவே மக்கள் பாதுகாப்புக்காக செல்ல வேண்டும் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
Similar News
News November 16, 2025
தேசிய பத்திரிகை தினம் – முதல்வர் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ’ ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம் என்றும், ஊடகங்கள் மட்டுமே அதிகாரத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே சக்தி என்றும் பதிவிட்டுள்ளார்.
News November 16, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி; ஆட்சியர் அழைப்பு

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22 ஆம் தேதி சனிக்கிழமை சி. எஸ்.ஐ.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி சாந்தோமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நவ.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றார்
News November 16, 2025
சென்னை: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

சென்னை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1353 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


