News November 2, 2025
சென்னையில் வரப்போகும் RRTS ரயில்கள்

சென்னையில் மெட்ரோவிற்கு இடையே இன்னொரு பக்கம் RRTS ரயில் சேவையும் வர உள்ளது. இதற்கான சர்வே பணிகள் தொடங்கி உள்ளன. பரந்தூரைச் சென்னையின் மையப்பகுதியுடன் இணைக்கும் வகையில் இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. மொத்தமாக மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விடப்பட்டு உள்ளது.
Similar News
News November 8, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் நேற்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
News November 7, 2025
வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மதியம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 7, 2025
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் நாளை (நவ.08) பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


