News August 20, 2024
சென்னையில் ரவுடி ஆசைத் தம்பி கொலை

சென்னையில் பிரபல ரவுடி ஆசைத்தம்பி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.கே.பி. நகரைச் சேர்ந்த இவர், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவரும், சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளியும் ஆகும். இந்நிலையில், தலையில் கடப்பா கல்லை போட்டு மர்மமான முறையில் இவர் கொல்லப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றிய எம்.கே.பி. நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும். ஷேர் பண்ணுங்க!
News January 23, 2026
சென்னை: ரேஷன் கார்டு உள்ளதா? மிஸ் பண்ண வேண்டாம்!

சென்னை மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்த்தல் & நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், கைபேசி எண்ணை பதிவு செய்யவோ (அ) மாற்றம் செய்யவோ அலைய வேண்டாம். இதற்காக நாளை (ஜன.24) சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News January 23, 2026
BREAKING: சென்னையில் கனமழை வெளுக்கும்

சென்னையில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.


