News July 11, 2024
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Similar News
News July 8, 2025
சென்னை சைபர் குற்றப்பிரிவு ரூ.2.96 கோடி மீட்பு

சென்னை சைபர் குற்றப்பிரிவு ஜூன் 2025-ல், 146 புகார்களில் ரூ.2.96 கோடி பணத்தை மீட்டு சாதனை புரிந்துள்ளது. இதில் மத்திய மண்டலம் மட்டும் ரூ.2.30 கோடியை மீட்டுள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களிலும் கணிசமான மீட்பு நடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரை மொத்தம் ரூ.15.30 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
News July 8, 2025
திருநங்கையர், திருநம்பியருக்கு வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பற்ற திருநங்கை மற்றும் திருநம்பியருக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முகாமில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. இது வேலை தேடும் திருநங்கையர், திருநம்பியருக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.
News July 7, 2025
வீட்டுமனை விளம்பரத்திற்கு கட்டுப்பாடுகள்

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை குழுமம் எச்சரித்துள்ளது. அதேபோல, 100க்கும் மேற்பட்ட வசதிகள் என்றோ, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றோ கவர்ச்சி வாசகங்களுடன் விளம்பரம் செய்யவும் தடை விதித்துள்ளது.