News April 18, 2024

சென்னையில் நாளை இலவச ரேபிடோ சேவை

image

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.

Similar News

News November 7, 2025

SIR: திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11-11-2025 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை மண்டலம் உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பணியை தொடங்கிய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நவ.11ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News November 6, 2025

சென்னை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

சென்னை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

25 லட்சம் பிஸ்கட் பாக்கெட் வழங்கும் தமிழக அரசு

image

சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது. தேவஸ்தானம் கேட்டு கொண்டதால் வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும். தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசின் துணையோடு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனவும் அதற்கான ஏற்பாடுகாளை இந்து சமய அறைநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்.

error: Content is protected !!