News August 22, 2024
சென்னையில் தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் சோதனை

ஆயிரம் விளக்கு முருகேசன் நாயக்கர் வணிக வளாகத்தில் உள்ள தனியார் கால் சென்டரில் தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், விரோதமாக பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், சிம் பாக்ஸ்கள் மற்றும் கணினி உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செல்போன் சிம் கார்டுகளை சிம் பாக்ஸ்களில் பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி லாபம் பெற்று வந்தது அம்பலமாகியுள்ளது.
Similar News
News November 10, 2025
சென்னையில் இன்றே கடைசி- APPLY HERE!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க:<
News November 10, 2025
மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளன. மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – 044-25619523 திருவள்ளூர் – 7305158550 செங்கல்பட்டு – 044-295417115 காஞ்சிபுரம் – 044-27237107 தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த கணக்கிட்டு படிவம் தொடர்பான சந்தேகங்களை தொடர்பு கொண்டு அறியலாம்.
News November 10, 2025
தனியார் மருத்துவமணை உரிமம் பதிவு கட்டாயம்!

சென்னை மற்றும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்களின் கீழ் உரிமம் பதிவு செய்யாத தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்வது கட்டாயம் என ஊரக மருத்துவ நலப்பணி அமைப்பகம் தெரிவித்துள்ளது பதிவு செய்யாத மருத்துவமணை 2026 ஜுன் மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் கால அவகாசம் கொடுக்கப்படாது உரிமம் பெற்று பதிவு செய்த மருத்துவமணை 5 ஆண்டுகள் மட்டுமே அவை செல்லும் மீண்டும் புதுபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


