News August 20, 2024

சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக.23, 24-ஆம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 485 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 70 மற்றும் மாதாவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ளன. மேலும், ஆக.25,26-ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Similar News

News January 13, 2026

சென்னையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த இணையதளங்களில்<<>> விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

சென்னை: பொங்கல் பணம் ரூ.3,000 வரலையா?

image

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

News January 13, 2026

சென்னை: வியாபாரி துடிதுடித்து பலி!

image

தர்மபுரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (57). இவர், சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் தங்கி, டிரை சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று சைக்கிளில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருவான்மியூர் – கொட்டிவாக்கம் நோக்கி செல்லும்போது பின்னால் டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதியதில் கோவிந்தராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கோபால் வீரையா (39) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!