News October 15, 2024
சென்னையில் இரவு 7 மணி வரை கனமழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருவதை அடுத்து, பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இரவு 7 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடியான தினேஷ்குமார், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கொலை, செம்மர கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 33 வழக்குகளில் தொடர்புடையவர். மேலும், ஆந்திரா, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களிலும் இவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அவர் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார், அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்தனர்.
News July 8, 2025
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 2/2

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, போரூர், காரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், நடேசன் ரோடு, நடுக்குப்பம், மையிலாப்பூர், ஆர்.கே.சாலை, சிட்லப்பாக்கம், சேலையூர், மாடம்பாக்கம், அடையாறு, சாஸ்திரி நகர், டீச்சர்ஸ் காலனி, செம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்
News July 8, 2025
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 1/2

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், கே.கே நகர், அசோக் நகர், வடபழனி, பி.டி ராஜன் சாலை, ராணி அண்ணா நகர், சைதாப்பேட்டை ரோடு, காமராஜர் சாலை, நடேசன் சாலை, 100 அடி ரோடு, ஆற்காடு ரோடு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், அரும்பாக்கம், வள்ளுவர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள். <<16986157>>தொடர்ச்சி<<>>