News August 19, 2024
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அடையாறு, சாஸ்திரி நகர், எல்.பி.சாலை, பரமேஸ்வரி நகர், பத்மநாபா நகர், ஆதம்பாக்கம், சோலைப்பன் தெரு, யூனியன் கார்பைடு காலனி, புழுதிவாக்கம் பிராதன சாலை, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, எம்.பி.ராஜகோபால் தெரு, பகத்சிங் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
Similar News
News January 24, 2026
சென்னை: கோயிலில் ரூ.41,800 சம்பளத்தில் வேலை!

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சரக்கறை காப்பாளர், அலுவலகம் உதவியாளர், இரவு காவலர், தோட்ட பராமரிப்பாளர், கால்நடை பராமரிப்பாளர், ஓதுவார், சுயம்பாகி, ஸ்ரீபாதம் தாங்கி ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 8ம் வகுப்பு முதல் பணிக்கு ஏற்றாற்போல படித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.41,800 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.27-க்குள் <
News January 24, 2026
சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News January 24, 2026
சென்னையில் தொடர்ந்து மழை வெளுக்கும்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஷேர் பண்ணுங்க.


