News August 5, 2024
சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள ZERO IS GOOD

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தடுக்க சென்னை பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்க ZERO IS GOOD என்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் குறிப்பாக எதை உணர்த்துகிறது என்ற கேள்வியும், ஆர்வமும் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.
Similar News
News January 13, 2026
சென்னை: பொங்கல் பணம் ரூ.3,000 வரலையா?

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 13, 2026
சென்னை: வியாபாரி துடிதுடித்து பலி!

தர்மபுரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (57). இவர், சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் தங்கி, டிரை சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று சைக்கிளில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருவான்மியூர் – கொட்டிவாக்கம் நோக்கி செல்லும்போது பின்னால் டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதியதில் கோவிந்தராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கோபால் வீரையா (39) என்பவரை கைது செய்தனர்.
News January 13, 2026
சென்னையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

செம்பியம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதே குடியிருப்பில் வசிக்கும் ஐடி ஊழியர் கந்தசாமி (40), ஜெபம் செய்வதாக கூறி அழைத்து சென்று, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிட்டு தப்பித்து பெற்றோரிடம் தெரிவிக்க, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கந்தசாமியை நேற்று கைது செய்தனர்.


