News November 25, 2025
செங்கை: பெண்ணிடம் 5 சவரண் சங்கிலி பறிப்பு!

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி. இவர், சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.24) இரவு பார்வதி கடையில் இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். அதை எடுக்க திரும்பிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 19, 2026
செங்கல்பட்டு:குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 19, 2026
செங்கல்பட்டு:செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <
News January 19, 2026
செங்கல்பட்டில் இனி தண்ணீர் பிரச்சினை இருக்காது!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நெமிலி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், 342.6 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில், அமைய உள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப் பணிக்கு, தமிழக முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


