News November 26, 2025

செங்கல்பட்டு: 12-ஆம் வகுப்பு மாணவன் அலையில் சிக்கி மாயம்!

image

திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் பிரம்மையன் (16), நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீனவர்கள் தேடியும் மாணவர் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 14, 2026

செங்கை: தை முதல் செல்ல வேண்டிய கோயில்கள்!

image

செங்கல்பட்டு மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்

*வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருக்கழுக்குன்றம்)
*கந்தசுவாமி கோயில் (திருப்போரூர்)
*சிங்கப்பெருமாள் கோயில்
*ரங்கநாதர் கோயில் (திருநீர்மலை)

மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

செங்கை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

செங்கல்பட்டு மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 14, 2026

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் போகி வாழ்த்துக்கள்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று (14.01.2026) இனிய போகித் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பழையன கழிந்து புதியன புகும் இந்நாளில், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, புகையில்லா போகி கொண்டாடி சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

error: Content is protected !!