News November 25, 2025
செங்கல்பட்டு: ரயில் மோதி வாலிபர் பலி!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, 5-வது நடைமேடையிலிருந்து 4-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்த 30 வயது வாலிபர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் இருந்த ஏ.டி.எம். அட்டையை வைத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நேற்று (ஜன-21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ஊர் காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 29 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் 32 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஊக்கமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பொதுநல தொண்டில் ஈடுபாடு உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.