News October 19, 2025

செங்கல்பட்டு: நாலாபுறமும் சிதறியோடிய லாரி டயர்கள்!

image

சேலத்தில் இருந்து சென்னைக்கு, வீடு கட்டுமானத்திற்கு தேவையான மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. வாலாஜாபாத் – வண்டலுார் சாலை, படப்பை புது மேம்பாலத்தின் துவக்க பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, லாரி கவிழ்ந்தது. இதில், லாரி பலத்த சேதமடைந்தது டயர்கள் சிதறியோடின. காயமடைந்த ஓட்டுநரை, அப்பகுதியினர் மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Similar News

News December 12, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகையும், பார்வையற்ற மாணவர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவிகளை பெற, மாற்றுத்திறன் அடையாள அட்டை, மருத்துவச் சான்று, ஆதார், குடும்ப அட்டை, புகைப்படம், கல்விச்சான்று ஆகியவற்றை பதிவேற்றி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார் .

News December 12, 2025

செங்கல்பட்டு: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News December 12, 2025

செங்கல்பட்டு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

செங்கல்பட்டு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க.

error: Content is protected !!