News November 25, 2025

செங்கல்பட்டு: தங்கத்தை பெருக வைக்கும் கோயில்

image

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு அருளும் ஈசன் அதிக சக்தி கொண்டவர் என்பதால் நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், ஒரு துவாரத்திலிருந்து வழிபடுகிறார். இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News January 25, 2026

செங்கை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

செங்கை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB <>Mobile <<>>App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 25, 2026

மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

image

மாமல்லபுரம் அருகே த.வெ.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் நட்சத்திர விடுதி முன்பாகக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜய் வருகை மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

News January 25, 2026

மாமல்லபுரத்தில் த.வெ.க சார்பில் கூட்டம்

image

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், (த.வெ.க) செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க அவர் சற்றுமுன் அரங்கம் வந்தடைந்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான செயல் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் திரண்டுள்ளனர்.

error: Content is protected !!