News April 3, 2025

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. மடிப்பாக்கம், மகாபலிபுரம், கீழ்கட்டளை, பல்லாவரம், கேளம்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

Similar News

News January 23, 2026

BREAKING: செங்கல்பட்டில் கனமழை வெளுக்கும்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான சென்னை , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

செங்கை: EB பில் எகுறுதா..?

image

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News January 23, 2026

செங்கை: சொந்த தொழில் தொடங்கணுமா?

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov<>.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!