News December 15, 2025
செங்கல்பட்டு: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 25, 2026
செங்கை: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
செங்கை: சினிமா பாணியில் கடத்தல் சம்பவம்!

செங்குன்றம் மெக்கானிக் கடையில் 60 ஆயிரம் ரூபாய் திருடிவிட்டு தலைமறைவான சரவணனை, உரிமையாளர் அஸ்லாம் இன்ஸ்டாகிராமில் பெண் குரலில் பேசி வரவழைத்துள்ளார். ஆசையில் வந்த சரவணனை கார் கும்பல் கடத்தியபோது, போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட அஸ்லாம் உட்பட 7 பேரை ஒட்டேரி போலீசார் கைது செய்து காரைப் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News January 25, 2026
செங்கை: பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி!

ஜமீன் பல்லாவரத்தைச் தஷீத் (7), தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தான். கடந்த 2 நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட சிறுவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மயங்கி விழுந்தான். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


