News December 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
தாம்பரம்: வீடு புகுந்து துணிகர சம்பவம்!

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பால்பாண்டி, நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமண விழாவிற்குச் சென்றார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
செங்கை: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
செங்கை: சினிமா பாணியில் கடத்தல் சம்பவம்!

செங்குன்றம் மெக்கானிக் கடையில் 60 ஆயிரம் ரூபாய் திருடிவிட்டு தலைமறைவான சரவணனை, உரிமையாளர் அஸ்லாம் இன்ஸ்டாகிராமில் பெண் குரலில் பேசி வரவழைத்துள்ளார். ஆசையில் வந்த சரவணனை கார் கும்பல் கடத்தியபோது, போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட அஸ்லாம் உட்பட 7 பேரை ஒட்டேரி போலீசார் கைது செய்து காரைப் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


