News November 26, 2025

செங்கல்பட்டு: இரவு நேர ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவம்பர் 25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் அமல்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்காக தங்களது உள்ளூர் அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்னை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 21, 2026

செங்கல்பட்டில் அதிர்ச்சி!

image

செங்கல்பட்டு கே.கே.நகர் பகுதியில் நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா சைன் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருமணி பகுதியைச் சேர்ந்த விக்ரம் (25) என்பவர் மது போதையில் தனது சொந்த வாகனத்திற்கு தானே தீ வைத்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 21, 2026

செங்கல்பட்டில் 300 பேர் அதிரடி கைது!

image

காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே மாவட்டத் தலைவர் சசிகலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. திடீரென ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 300 பேரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

News January 21, 2026

தாம்பரம் – கொல்கத்தா வந்தே பாரத் ரயில் இயக்கம்

image

தாம்பரம் – கொல்கத்தா (சாந்திரகாச்சி) இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை ஜனவரி 18 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்று காலை இந்த ரயில் தாம்பரம் வந்தடைந்தது. தமிழகத்திற்கான மூன்றாவது அம்ரித் பாரத் சேவையான இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 23 முதல் தாம்பரம், நாகர்கோவில் உள்ளிட்ட ஐந்து புதிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

error: Content is protected !!