News July 15, 2024
செங்கல்பட்டு: இப்பகுதியில் நாளை மின்தடை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி, மறைமலைநகர், நாவலூர், படூர் துணை மின்நிலையத்தில் நாளை(16.7.24) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், மேலே கொடுக்கப்பட்டுள்ள துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.
Similar News
News July 10, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (ஜூலை 09) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!
News July 9, 2025
ஆபத்துகளில் இருந்து காக்கும் குளுந்தியம்மன்

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குளுந்தியம்மன் கோயில். குளுந்தியம்மன் இங்கு ஊர்காப்பு அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குளுந்தியம்மன் “ஊர்காப்பு அம்மன்” ஆக இருப்பதால், ஊரையும் மக்களையும் ஆபத்துகளில் இருந்து காத்து ரட்சிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு வந்து வழிபடுகின்றனர். மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்!
News July 9, 2025
தார்ப்பாய் இல்லாமல் செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சவுடு மண் மற்றும் ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் இல்லாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் மண் பரவி விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தார்ப்பாய் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.