News January 13, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (ஜனவரி-12) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2026

செங்கையில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு

image

செங்கல்பட்டு: மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலாளிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி தொடங்கியுள்ளது. நேற்று முதல் 18ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 1.30 மணி வரை 10 நாட்கள் பயிற்சி நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். பயிற்சி முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்

News February 10, 2026

செங்கல்பட்டில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

திட்டத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா இன்று தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நகரங்களில் உள்ளாட்சி தலைவர்கள் உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

error: Content is protected !!