News March 28, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து

image

கூடுவாஞ்சேரியில் இருந்து நேற்று மாலை விக்ரம் என்பவர் தனது காரில் பெருமாட்டுநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நந்திவரம் மலைமேடு சாலை அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் சுவரை இடித்து உடைத்துக்கொண்டு புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ரஞ்சித் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

செங்கை: புழுதி பறந்த கார் – பீதியில் மக்கள்!

image

மறைமலை நகர் நகராட்சி 8-வது வார்டில், நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம், காலை & மாலை நேரங்களில் அதிக அளவில் கூட்டம் நிறைந்து காணப்படும். இதில் நேற்று மாலை இரண்டு கார்களில் வந்த, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அதிக வேகமாக கார்களை இயக்கி மைதானத்தில் புழுதி பறக்க சாகசத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று வாகனங்களை ஓட்டுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.

News January 13, 2026

செங்கையில் உள்ளவர்களுக்கு பொங்கலுக்கு குட் நியூஸ்!

image

செங்கல்பட்டு, கோவளம் பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் மையமும், தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர் சாகச சவாரியை ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுற்றுலா பயணிகளுக்கான சாகச ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை தொடங்கி வைத்தார். இது 8 நாட்கள் நடைபெற உள்ளது.

News January 13, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (ஜனவரி-12) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!