News October 18, 2025

செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை

image

மறைமலை நகர் அடுத்த கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவேந்திரன், கிருஷ்ணவேணி, தம்பதி. இவர்களது வீட்டில் நேற்று (அக்.17) காலை யாரும் இல்லாத போது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

Similar News

News November 8, 2025

செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <>இணையத்தளத்தில் <<>>இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இதனை உடனே ஷேர் பண்ணுங்

News November 8, 2025

செங்கல்பட்டு: இன்று குடும்ப அட்டை குறைதீர் முகாம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரகளுக்கான குடும்ப முகாம் நாளை (நவ.8) நடைபெற உள்ளது. வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக குறைதீர் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூர்-வடப்பட்டினம், மதுராந்தகம்-பூதூர், திருக்கழுக்குன்றம்-வாயலூர், திருப்போரூர்-மேலையூர், வண்டலூர்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்/நீக்குதல், புதிய அட்டை போன்ற சேவைகளை பெறலாம். ஷேர்!

News November 8, 2025

செங்கல்பட்டு: பொக்லைன் மீது மோதி அரசு பேருந்து விபத்து!

image

செங்கல்பட்டு, மாம்பாக்கம், சோனலுாரிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற ’55சி’ மாநகர பேருந்து, மூன்று பெண்கள் உட்பட 15 பயணியருடன், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் புறப்பட்டது. வண்டலுார் அடுத்த கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, முன்னால் சென்ற ‘பொக்லைன்’ இயந்திரம் மீது மோதி, கால்வாயில் கவிழ்ந்தது. இதில், 15 பயணியரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!