News August 6, 2024
செங்கல்பட்டில் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடையுடன் வெளியே செல்லுங்கள்.
Similar News
News January 18, 2026
தாம்பரம் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய 4 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், 2 ஆய்வாளா்கள், 5 உதவி ஆய்வாளா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா். மாநகர சைபா் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் கே.சசிகுமாா், பல்லாவரம் டி3 காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
News January 18, 2026
மாமல்லபுரம்: பொங்கல் நாளில் பெரும் சோகம்!

மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் (ஜன.16), கல்லூரி மாணவர்கள் இருவர் சுற்றுலா வந்த நிலையில் மாலை, கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது மாணவர்கள் இருவரும் எதிர்பாரத விதமாக ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். இதனையடுத்து ஒருவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 18, 2026
செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (ஜனவரி-17) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


