News July 11, 2024
செங்கல்பட்டில் கனமழை பெய்து வருகிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாமல்லபுரம், பெருங்குளத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், இரவில் மழை பெய்து குளிச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News July 8, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

தமிழக அரசு “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி மூலம் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்த தகவல்களை பொதுமக்கள் தங்கள் சுயவிவரங்களை வெளியிடாமல் தெரிவிக்கலாம். மேலும், போதைப்பொருள் விற்பனையாளர்கள் குறித்து புகார் அளிக்க 10581 என்ற அமலாக்கப்பிரிவு உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News July 8, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (ஜூலை 07) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!
News July 7, 2025
பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

செங்கல்பட்டு மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <<-1>>AAVOT.COM <<>>என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.