News May 4, 2024

சுயமரியாதை நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

image

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் (மே 3) நேற்று மாலை 6 மணி அளவில் திராவிட கழகத்தின் சுயமரியாதை நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டார். பொதுக் கூட்டத்தில் திராவிட கழகத்தின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள்( ம) தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Similar News

News November 11, 2025

மாநில உணவு ஆணைய மண்டல ஆய்வுக் கூட்டம்

image

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் மண்டல ஆய்வுக் கூட்டம், அதன் தலைவர் சுரேஷ் ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டத்தில், உணவு ஆணையம் சார்ந்த பணிகள் மற்றும் திட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News November 11, 2025

பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதியில் மின் தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (நவம்பர் 12) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரணாரை, பெரம்பலூர் கிராமப்புறப் பகுதி, எளம்பலூர், மின் நகர், பாளையக்கரை ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

News November 11, 2025

பெரம்பலூர் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி

image

பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில், ஹாக்கி மற்றும் கால்பந்து போட்டி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கான வளை பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் முகமது பட்டணம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியின் மாணவி வெற்றி பெற்றார். அவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் விளையாட உள்ளனர்.

error: Content is protected !!