News August 4, 2024
சீமான் மீது வழக்குப் பதிவு

அனுமதியே பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 20, 2026
மெரினாவில் பரபரப்பு!

திருச்சியை சேர்ந்த சண்முகவேல் (38) மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து சண்முகவேலிடம் தகராறு செய்துள்ளனர். அவரை அடித்து உதைத்து அவர் வைத்திருந்த ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். படுகாயம் அடைந்த சண்முகவேல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த முருகா (31) என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
News January 20, 2026
மாமூல் தராத ஆத்திரத்தில் பொய் வழக்கு!

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவரை கடந்த டிசம்பர் மாதம் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், சென்னையில் எப்படி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது என துணை ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வனிதா மாமூல் கொடுக்காத காரணத்தால் போலீசார் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்த வனிதாவை பொய் வழக்கில் கைது செய்தது தெரியவந்தது.
News January 20, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (19.01.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


