News January 10, 2025

சீமான் மீது கோவையில் வழக்கு பதிவு

image

தந்தை பெரியாரை அவமரியாதையாக பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, கோவை போத்தனூர் காவல் நிலையத்தில், இன்று வழக்கு பதிவு செய்தனர். கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளின் கீழ், மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 10, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

பொள்ளாச்சி அருகே விபத்து: 2 பேர் பலி

image

பொள்ளாச்சியைச் சேர்ந்த சதாசிவம், சூளேஸ்வரம்பட்டியைச் சேர்ந்த பரத் ஆகிய 2 பேர் ஒரே பைக்கில் வடக்கிப்பாளையத்தில் இருந்து புரவிபாளையம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் சதாசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 10, 2025

கோவை: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை <>click<<>> செய்து பார்க்கவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். (BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!