News August 5, 2024
சீட் திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் அழைப்பு

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டி தேர்வுக்கு பயிற்சி அளித்தல், சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல், வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், வீடு கட்ட நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அர்வமுள்ளவர்கள் www.dwbdnc.dosje.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வேதனை

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான அப்பயநாயக்கன்பட்டி, வலையபட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், எதிர்க்கோட்டை ஆகிய இடங்களில் விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் அதிகம் தென்படுவதாகவும், மக்காச்சோள பயிர்களை நாசம் செய்வதாகும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
News January 24, 2026
விருதுநகர் : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

விருதுநகர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு கிளிக் செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 24, 2026
விருதுநகர் பாலியல் குற்றவாளிக்கு தண்டனை விதிப்பு

விருதுநகரை சேர்ந்த 53 வயதான நபர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக கடந்த 2024ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் & பாலியல் வன்கொடுமை குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யபட்டு நேற்று 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.


