News October 1, 2025

சிவாஜி கணேசன் படத்திற்கு முதல்வர் மரியாதை

image

அடையாறு, தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் இன்று (அக்.1) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் சிவாஜி கணேசன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது நடிகர் பிரபு, கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 12, 2025

சென்னையில் சீரியல் நடிகை தற்கொலை

image

சென்னை பிராட்வேவைச் சேர்ந்த சீரியல் நடிகை ராஜேஸ்வரி (39), குடும்ப பிரச்சனை காரணமாக பிபி மாத்திரை அதிகளவு உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த அவர், கணவர் சதீஷுடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News December 12, 2025

சென்னைக்கு வருது ‘டபுள் டக்கர்’ பஸ்!

image

சென்னையில் முதற்கட்டமாக அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.

News December 12, 2025

சென்னை கர்ப்பரேஷனில் வேலை; ரூ.60,000 சம்பளம்!

image

சென்னை கர்ப்பரேஷனில் கால் நடை மருத்துவம் படித்தவருக்கு 15 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாத சம்பளம் ரூ.60,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து, வரும் டிச.16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க. சென்னையில் அரசு வேலை தேடுவோருக்கு உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!