News March 29, 2025
சிவகாசி பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகாசி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை (மார்ச்.30) இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மொட்டை அடித்து வழிபடுவர். அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு வேட்டைக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.
Similar News
News July 11, 2025
விருதுநகர் மாவட்டத்தில் 3 நாள் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஈபிஎஸ்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வரும் ஆகஸ்டு மாதம் 4,5,6 ஆகிய 3 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரசாரத்தின்போது அவர் 41 கிலோமீட்டர் நடந்து சென்று 2 லட்சம் மக்களை சந்திக்கிறார். மேலும் சிவகாசி பகுதியை சேர்ந்த பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், ராஜபாளையத்தில் உள்ள மா விவசாயிகள், விசைத்தறி தொழிலாளர்களை சந்திக்கிறார்.
News July 11, 2025
சிவகாசியில் குரூப் 4 தேர்வு எழுதுவோரின் கவனத்திற்கு

திருத்தங்கல் பெருமாள் கோயில் தேரோட்டம் நாளை(ஜூலை.12) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் 10 மணி வரை சிவகாசி – விருதுநகர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மாற்று வழிச்சாலையில் செல்லும். இதனால் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல கால தாமதம் ஏற்படுவதால் அதற்கு ஏற்ப தேர்வு மையத்திற்கு செல்ல தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT
News July 11, 2025
சிவகாசி: ரகசிய ஆய்வில் பட்டாசு தயாரித்த 9 பேர் கைது

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து அனுப்புவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் ரகசிய ஆய்வு செய்தனர். அதில் விஸ்வநத்தம் பகுதியில் 3 பேர், மீனம்பட்டியில் 4 பேரை கைது செய்தனர். இதேபோல் தங்கள் வீட்டின் அருகே தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்த மீனம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் பட்டாசு தயாரித்ததாக ஒரே நாளில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.