News August 7, 2025

சிவகங்கை: IOB வங்கியில் வேலை..இன்று கடைசி நாள்..APPLY

image

சிவகங்கை மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE செய்து உதவவும்

Similar News

News November 14, 2025

மானாமதுரை டூ திருப்பதி இனி சுலபமா போகலாம்

image

மானாமதுரை வழியாக நவம்பர் -18 முதல், டிசம்பர்- 31ஆம் தேதி வரை
இராமேஸ்வரத்திலிருந்து, திருப்பதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக திருப்பதி செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் மானாமதுரை ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயிலில் திருப்பதி பயணிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 14, 2025

சிவகங்கை அருகே கொடூரம் 18 வயது இளைஞர் பரிதாப பலி

image

சிவகங்கை அதப்படக்கி பகுதியை சேர்ந்த மணிகண்டன், சமயபிரபு உள்ளிட்ட இரு மாணவர்கள் கோவை செல்ல டூ–வீலரில் சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டனர். பையூர் அருகே தொண்டி ரோடு நான்கு ரோடு சந்திப்பில் திரும்பியபோது மதுரையிலிருந்து வந்த சரக்கு வாகனம் மோதி இருவரும் காயமடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சமயபிரபு உயிரிழந்தார். லாரி டிரைவர் நிக்சன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

News November 13, 2025

காரைக்குடி: வாக்காளர் படிவங்களை பெற தொடர்பு எண்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த படிவங்கள் (SIR) வீடு தோறும் கடந்த 5 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. சில வீடுகளில் வாக்காளர்கள் 3 தடவை சென்றும்  வீட்டில் இல்லாத காரணத்தால் அவரவர்கள் வாக்காளர் பட்டியலை 18002339985 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என காரைக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.  

error: Content is protected !!