News November 25, 2025

சிவகங்கை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News January 16, 2026

சிவகங்கை: வெள்ளியில் தயரான பொங்கல் பானை

image

தேவகோட்டையில் முருகானந்தம் என்பவர் தங்க நகை, வெள்ளி பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வெள்ளி மூலம் சிறிய அளவிலான கலை பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அவரது மகளுக்கு பரிசளிக்கும் நோக்கில் 12 கிராம் வெள்ளியில் பொங்கல் பானை, கரண்டி, கரும்பு, விறகுகள் தயாரித்து வழங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

News January 15, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (15.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT.

error: Content is protected !!